Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களின் பட்டியல்….. டெல்லி முதலிடம்….. அதிர்ச்சி தகவல்…..!!!

தேசிய குற்ற ஆவண காப்பகம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.அதில் டெல்லி முதலிடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறியுள்ளது. இரண்டாவது இடத்தில் மும்பை நகரம் உள்ளது. அதனைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் பெங்களூர் உள்ளது.டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஓராண்டில் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

டெல்லியில் கடந்த ஆண்டில் பெண்களுக்கு எதிரான 13 ஆயிரத்து 892 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 40 சதவீதத்துக்கும் கூடுதலான அதிகரிப்பு ஆகும்.மும்பையில் 5,543 வழக்குகளும், பெங்களூரில் 3,127 வழக்குகளும் பதிவாகியுள்ளது. மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் குற்றங்கள் பதிவாகியுள்ளன.

 

 

Categories

Tech |