அநேக பெண்களுக்கு, கழுத்தை சுற்றி கருமைநிறம் தென்படும். இதை எளிமயான முறையில் வீட்டு உபயோகப் பொருட்களை கொண்டே போக்கி விடலாம்.
பெண்கள் நிறைய பேருக்கு, கழுத்தை சுற்றி கருமை நிறம் தென்படும். அவை நகைகள் அணிவது, உடல் சூடு, ஒவ்வாமை காரணமாகயும் இந்த பிரச்சினை தோன்றும். அதனை எளிமையான வீட்டு உபயோகப் பொருட்களை கொண்டே போக்கி விடலாம். உருளைக்கிழங்கு, கழுத்தில் இருக்கும் கருமையை போக்கும் தன்மை உடையது. உருளைக்கிழங்கை நன்கு அரைத்து, சாறு எடுத்து, கழுத்தை சுற்றி தேய்த்து வரலாம்.
தயிர் கருமையை போக்கி பிரகாசம் சேர்க்கும். சிறிதளவு தயிருடன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து கழுத்தை சுற்றி தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விடலாம். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், நல்ல மாற்றம் தென்படும். இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன் மஞ்சள்தூள் அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன், சிறிதளவு ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து பசை போல் தயார் சேர்த்து, அதனை கழுத்தை சுற்றி தடவி, அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். அவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் கருமை நீங்க தொடங்கும்.
2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகருடன், நான்கு டேபிள்ஸ்பூன் தண்ணீர் கலந்து பஞ்சில் முக்கி பின் கழுத்தை சுற்றி தேய்த்து வர விரைவில் கருமை நீங்கி விடும்.
பேக்கிங் சோடா சிறிதளவு, தண்ணீர் கலந்து பசைபோல் குழைத்து கழுத்தில் தடவி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.