Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்… ரயில்வே அதிரடி உத்தரவு…!!!

நாட்டில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நம் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். இந்தக் குற்றங்களுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சிலர் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டே வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பாலியல் வன்கொடுமை நாட்டின் தலை விரித்து ஆடுகிறது. அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நாட்டில் நிலவி வருகிறது.

இந்நிலையில் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி அதிகாரிகளை அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபடுத்துவது, ரயில் நிலையங்களை சுற்றியுள்ள பார்க்கிங், இணைப்பு சாலைகள், பிளாட்பாரத்தில் கேமரா அமைப்பது, விளக்குகள் பொருத்துவது ஆகிய ஏற்பாடுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |