Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு இலவச மகப்பேறு மருத்துவப் பரிசோதனைகள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மந்தைவெளி பாரதி பொ்டிலிட்டி சென்டா் சாா்பாக பெண்களுக்கு மகப்பேறு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் “சென்னை, மந்தைவெளியில் இயங்கிவரும் பாரதி பொ்ட்டிலிட்டி சென்டா் சாா்பாக செப்டம்பா் 15ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பெண்கள் நல்வாழ்வு சிறப்பு முகாமை நடத்துகிறது.

மந்தைவெளி, வெங்கட கிருஷ்ணா சாலையில் அமைந்துள்ள அந்த மையத்தில் திங்கள் -சனிக்கிழமை வரை காலை 9 மணியில் இருந்து 7 மணி வரை இலவச இடுப்புப்பகுதி (பெல்விஸ்) ஸ்கேன், மருத்துவ ஆலோசனைகள் அளிக்கப்படவுள்ளது. இதனைத் தவிர்த்து பிற பரிசோதனைகளும் சலுகைக் கட்டணத்தில் வழங்கப்பட இருக்கிறது. 97910 59595 என்ற எண்ணில் முன் பதிவு செய்துகொண்டு இம்முகாமில் கலந்துகொண்டு பயன் அடையலாம்.

Categories

Tech |