மர்ம நபர் ஒருவர் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறித்து வந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை பதிவிறக்கி பின் அதனை மார்பிங் செய்து 100-க்கும் மேற்பட்ட பெண்களை குறிவைத்து பிளாக் மெயில் செய்து பணம் பறித்து வந்துள்ள மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவர் பல பெண்களிடம் அவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக கூறி மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து வங்கியின் மேலாளர் ஆன பெண் ஒருவர் தன் புகைப்படங்கள் மார்ப்ஹிங் செய்யப்பட்டு தொடர்ந்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டு வருவதாகவும் அதற்காக பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும் இந்த மர்ம நபர் மீது புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இந்த மர்ம நபர் செய்து வந்த செயல்கள் தெரியவந்துள்ளது. மேலும் இந்த நபர் இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் சுமித் ஜா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து 26 வயதான இந்த இளைஞர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2018 ஆம் வருடத்தில் சத்தீஸ்கர் மற்றும் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் பல்வேறு வழக்குகளில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்தியாவில் 2018 ஆம் வருடத்தில் சைபர் குற்றங்களில் மட்டுமே 120க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது பதிவாகியுள்ளது என்று இந்திய உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பில் இருக்கும் நேஷனல் கிரைம் ரெக்கார்டு தெரிவித்துள்ளது.