நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 102.49 க்கு இன்று விற்பனையாகிறது. இதனால் பெட்ரோல் விலையை குறைக்குமாறு பல்வேறு தரப்பிடமிருந்தும் கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டபோது தமிழகத்தின் பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியை ரூ.3 குறைத்ததற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இந்த வரி குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.