வாகனங்களுக்கு நிரப்பப்படும் சி.என்.ஜி , பி.என்.ஜி கேஸ் பாட்னாவில் இந்திய எரிவாயு ஆணையத்தால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த நிறுவனம்சி.என்.ஜி கேஸ் விலையை மூன்று ரூபாயும், பிஎன்ஜி கேஸ் விலை 2 ரூபாயும் உயர்த்தி இருக்கிறது. இதன் மூலமாக பாட்னாவில் சி என்ஜி யின் விலை ரூ.72.96 ஆக உள்ளது. இதற்கு முன்னதாக கிலோவிற்கு ரூபாய் 69.96 இருந்தது. மேலும் இதே போல் பிஎன்ஜி ஒரு எஸ்சி எம் 37.87 ஆக இருந்தது. தற்போது ரூ.37.87 எஸ்சி எம் ஐ தாண்டியுள்ளது.
இந்நிலையில் பாட்னாவில் பெரும்பான்மையான மக்கள் ஷேர் ஆட்டோக்களை விரும்புகின்றனர். பொது போக்குவரத்து கட்டணம் உயர்வு மட்டுமின்றி தற்போது ஆட்டோ, டாக்சி கட்டணமும் உயர்ந்திருப்பது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளை கருத்தில் கொண்டே பீகார் மாநிலத்தில் டீசல் வர்த்தக வாகனங்களின் இயக்கத்தை நிறுத்த முடிவு செய்திருக்கிறது. போக்குவரத்து நிறுவனங்கள் பாட்னாவில் சிஎன்சி தேர்வு செய்கிறது தனியார் பயணிகள் மாநிலம் முழுவதும் சிஎன்ஜி நிலையங்களை கோருகின்றார்கள். பாட்னாவில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 116.23 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 101.06 ஆகவும் இருக்கிறது.