Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல், பாலுக்கு அதிக விலை…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

அண்மைக்காலமாக பணவீக்கம் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து பொதுமக்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருப்பதாலும் மற்றும் பணவீக்கம் காரணமாகவும் பெட்ரோல் மற்றும் பால் உள்ளிட்டவற்றின் விலையானது, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சர்வதேச அளவில் உணவு விலை உயர்வாக இருப்பதால், இந்தியாவிலும் உணவு விலை உயர்வாக இருக்கும் என்றும் சமையல் எண்ணெய் விலை, மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |