Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெட்ரோல் பங்கிற்கு சென்ற கணவர்…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. நெல்லையில் பரபரப்பு சம்பவம்…!!

சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்த மனைவியை கணவர் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை செந்தில் நகர் பகுதியில் வீர மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வி வீரமணிகண்டனை விட்டு பிரிந்து கருங்குளத்தில் இருக்கும் அவரது சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார். இதனையடுத்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு வீரமணிகண்டன் செல்வியை பலமுறை அழைத்துள்ளார். ஆனால் செல்வி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செல்வி வேலை பார்க்கும் பெட்ரோல் பங்கிற்கு சென்ற வீரமணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த செல்வியை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீரமணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |