ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள அல்பினூக் நகரில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சென்ற டேங்கர் லாரி திடீரென சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதியதில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியது. இதில் சாலையில் சென்று கொண்டிருந்த ஏராளமான வாகனங்கள் தீக்கீரையாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் சாலையோரம் இருந்த குடியிருப்பு கட்டிடங்களுக்கும் தீ பற்றியுள்ளது.
இந்த நிலையில் இந்த கோர விபத்தில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் பலத்த தீக்காயம் அடைந்துள்ளனர் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பல பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.