Categories
அரசியல்

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு…. நடிகை கஸ்தூரி கேள்வி…!!!!

இடைத்தேர்தல் தோல்வியால் தான் பாஜக பெட்ரோல் விலையை குறைத்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான வரியை 10 ரூபாயும் குறைத்துள்ளது.  இதனை தொடர்ந்து புதுச்சேரி அரசு பெட்ரோல் விலையை 7 முதல் 8 ரூபாயும், டீசல் விலையை 9 முதல் 10 ரூபாயும் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விலையானது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் 55 காசும்,  டீசல் விலை 19 ரூபாய் குறையும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருந்தார்.  பாஜக ஆளும் பல மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு அமல் படுத்தப்பட்டு வருகின்றது.

இருப்பினும் சில மாநிலங்கள் இடை தேர்தலில் தோல்வியை சந்தித்ததால் தான் பாஜக பெட்ரோல் விலையை குறைத்தது என்று விமர்சனம் செய்து வருகின்றது. மேலும் தீபாவளிக்கு முன் திரையரங்குகளை திறந்தால்தான் வசூல் செய்ய முடியும் . அதேபோல் தேர்தலுக்கு முன்னதாக வாரி இறைத்தால் தான் ஓட்டு வாங்க முடியும் என்றும், தேர்தலுக்கு முன்பாக மக்களை கவர்வதற்காக பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளது என்று விமர்சனங்களை செய்துவருகின்றனர்.

இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு எதிராக நடிகை கஸ்தூரி கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இடைத் தேர்தல் தோல்வியால் தான் பாஜக பெட்ரோல் விலையை குறைத்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தேர்தலுக்கு முன் வாரி இறைத்தால் தான் ஓட்டு வாங்க முடியும் என்ற எண்ணத்தில் செய்திருந்தால் தேர்தலுக்கு முன் அல்லவா விலை குறைப்பு இருந்திருக்கும்? தற்போது ஏன் விலையை குறைத்து இருக்க வேண்டும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |