காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் தலைமை தாங்கினார்.
இவர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் லாரன்ஸ், மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் தாரகை கத்பர்ட், சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.