தமிழகத்தில் பெட்ரோல் விலை 76 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூபாய் 102 ஆகவும், .டீசல் விலை 70 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 92 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னையில் எரிவாயு சிலிண்டர் விலை 967 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை கணிசமான அளவில் உயர்ந்துள்ளது.
இதனால் சாமானிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் வரலாறு காணாத விலை உயர்வு இந்தியாவில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை இந்த அளவிற்கு பாதித்துள்ளது. ஏற்கனவே மக்கள் விலைவாசி உயர்வால் விழிபிதுங்கி நிற்கும் நிலையில் இந்த எரி பொருட்கள் விலையேற்றம் மேலும் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.