சென்னையில் 106-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.91.43-க்கும் விற்பனையாகிறது.
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாக கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.