Categories
அரசியல்

‘பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி சம்பாதிசிங்கல’…  அந்த 4 கோடிய சமமாக பங்கிட்டு கொடுங்க….  மம்தா பானர்ஜி வலியுறுத்தல்…!!!

பெட்ரோல் டீசல் விற்றதால் சம்பாதித்த 4 லட்சம் கோடியை அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக பங்கிட்டு தர வேண்டும் என மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று சட்டசபையில் இதற்கு பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: “ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் நெருங்குவதை மனதில் வைத்துக் கொண்டு, பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

தேர்தல் வரும்போதெல்லாம் அவர்கள் விலையைக் குறைக்கிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு விலையை உயர்த்தி விடுகிறார்கள். எனவே சமீப காலத்தில் கலால் வரியை உயர்த்தி பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் அவற்றை அதிக விலைக்கு விற்றதால் மத்திய அரசு 4 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது. இதனை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சமமாக பங்கிட்டு தர வேண்டும். உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒப்பிடுகையில் மேற்கு வங்காளத்துக்கு அளிக்கப்பட்ட தடுப்பூசிகள் மிக குறைவு. அதே சமயம் ஒரு டோஸ் கூட நாங்கள் வீணாக்க வில்லை என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |