தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் தென் மாவட்டத்தில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவையில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஜேசுராஜ் மற்றும் இலியாஸ் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளாக உள்ளனர். சிசிடிவி மற்றும் நுண்ணுறிவு பிரிவு விசாரணை அடிப்படையில் குற்றவாளியில் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடு அல்லாத பொருட்கள் மீது தீ வைத்து தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மத அமைப்பினரும் இதற்கு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.