பெட்ரோல் குண்டு தயாரித்த கார் ஓட்டுநரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சம்மந்தம் கிராமத்தில் பெட்ரோல் குண்டு தயாரிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனசிங்கு(39) என்பவரது வீட்டிற்கு பின்புறம் வைக்கோல் போரில் மஞ்சள் நிற கட்டை பையில் 10 பாலிதீன் பைகளில் பெட்ரோல் ஊற்றி முடிச்சு போட்டு வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கார் ஓட்டுநரான தனசிங்குவை பிடித்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் அளவுக்கு அதிகமாக பலரிடமிருந்து கடன்களை வாங்கி திருப்பி கொடுக்க முடியாமல் தனசிங்கு சிரமப்பட்டுள்ளார். இதனால் கார் மீது பெட்ரோல் குண்டை வீச திட்டமிட்டார். பின்னர் அதன் மூலம் இன்சூரன்ஸ் பெறலாம் என கருதியுள்ளார். இதனால் தனது சகோதரர்களான தர்மலிங்கம், சுப்பிரமணி மற்றும் அவரது நண்பருடன் இணைந்து திட்டத்தை நிறைவேற்றுவதற்குள் போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். இதனை அடுத்து பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்த போலீசார் மற்ற 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.