Categories
மாநில செய்திகள்

பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு…. ரேஷன் முறை அமல்…. கடுப்பான உரிமையாளர்கள்….!!!

கோவையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான 130 பங்குகள், பாரத் பெட்ரோலியத்துக்கு சொந்தமான 80, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான 49 பெட்ரோல் பங்குகள் இயங்கி வருகின்றன. இந்த பெட்ரோல் பங்குகளுக்கு தேவையான பெட்ரோல், டீசல் நிறுவனத்திற்கு சொந்தமான இருகூர் மற்றும் அத்தப்பகவுண்டன் புதூரிலுள்ள கிடங்குகளிலிருந்து லாரிகள் மூலம் வினியோகிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து கோவையில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு தேவையான பெட்ரோல், டீசல் கிடங்கிலிருந்து வழங்குவதில் விற்பனைக்கு ஏற்றவாறு ரேஷன் முறை பின்பற்றப்படுவதால் தான் கோவையில் தட்டுப்பாடு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் சிலவற்றில் விருப்பினை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயம்புத்தூர் மாவட்ட பெட்ரோல் பங்க் டீலர்கள் அசோசியேஷன் பொருளாளர் மோகன்ராஜ் கூறியது, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தவிர, பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய இரு நிறுவனங்கள் பெட்ரோல் பங்க் டீலர்களுக்கு டீசல் மற்றும் ரேஷன் முறையில் வழங்கி வருகிறது. நாங்கள் கேட்கும் போது அளவுக்கு டீசல் வழங்காமல், வழக்கமாக வழங்கப்படும் கோட்டாவில் ஒரு பகுதியை குறைத்து தான் வழங்குகின்றனர். இது குறித்து கேள்வி எழுப்பினால், டீசலை அதிகளவு விற்பனை செய்தால் நஷ்டம் ஏற்படுகிறது. அதனால் தான் அதன் அளவை குறைத்து ரேஷன் முறையில் வழங்கி வருகிறோம். அதை விற்பனையில் நீங்கள்தான் சமாளித்துக் கொள்ள வேண்டும் என்று அதிகாரி மோகன்ராஜ் கூறினார்.

தொடர்ந்து இதுகுறித்து பாரத் பெட்ரோலியம் கோவை மேலாளர் சந்திரசேகர் கூறியது, கோவையை பொறுத்தவரை பெட்ரோல், டீசல் விநியோகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. சில டீலர்கள் முன்னதாக செலுத்த வேண்டிய தொகை செலுத்தாத காரணத்தினால் நிறுத்தி வைத்திருப்போம். பணம் சரியாக செலுத்துபவர்களுக்கு முறையாக பெட்ரோல்,டீசல் வழங்கப்படுகிறது. மேலும் சில பங்குகளுக்கு டீசல் ரேஷன் முறையில் வழங்குவது எங்களது துறையின் கொள்கை முடிவுகளுள் ஒன்று தான். இது குறித்து வெளிப்படையாக எதுவும் சொல்ல முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |