புவி வெப்பமயமாதலை தடுப்பதற்காக கார்பன் உமிழ்வை குறைக்க பெட்ரோலில் எத்தனால் கலந்து பயன்படுத்துவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. தற்போது இந்தியா 8.5 எத்தனால் கலப்பை செயல்படுத்தி வரும் நிலையில் 2030 ஆம் ஆண்டுக்குள் 20% ஆக உயர்த்தவும் திட்டமிட்டு இருந்தது. ஆனால் தற்போது 20 சதவீதம் எத்தனால் கலப்புக்கு 2025 ஆம் ஆண்டு ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு எத்தனால் கொள்முதலுக்காக எண்ணெய் நிறுவனங்கள் 21 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளன. எத்தனால் கொள் முதல் 8 மடங்கு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பலன் அடைவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
Categories
பெட்ரோலில் 20% எத்தனால் கலக்க திட்டம்…. பிரதமர் மோடி….!!!!
