உலக அமைதிக்கான புகைப்பட போட்டியில் பெங்களூர் சிறுமிக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.
யுனஸ்கோ மற்றும் ஆஸ்திரியா நாடாளுமன்றம் ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் உலக அமைதிக்கான புகைப்பட விருது என்ற பெயரில் புகைப்பட போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த போட்டியில் பெங்களூருவை சேர்ந்த அரவிந்த் சங்கர் என்பவருடைய மகள் ஆத்யா(4 வயது) கலந்து கொண்டார். அவருக்கு சர்வதேச விருதும் கிடைத்துள்ளது. ஆதித்யாவின் தாயாரான ரோஷினி தனது பெற்றோர் வீட்டில் அவருடைய தாயின் மடியில் படுத்தபடி ஓய்வெடுத்தார். அதை மகள் மிக அழகாக செல்போனில் படம் எடுத்துள்ளார். அது கருப்பு வெள்ளை வண்ணத்தில் மிக யதார்த்தமாக அமைந்தது.
அந்த புகைப்படத்தை அரவிந்த் சங்கர் மடியில் அமைதி என்ற தலைப்பில் யுனெஸ்கோ நடத்திய புகைப்பட போட்டிக்கு அனுப்பி வைத்தார். இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த புகைப்படம் வெற்றியும் பெற்றது. அதாவது புகைப்படம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்த விருதை பெற ரோஷினி மற்றும் அவரது மகள் ஆத்யாவுடன் கடந்த மாதம் 21ஆம் தேதி வியண்ணாவுக்கு சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆத்யா அந்த விருதை பெற்றுக்கொண்டார்.
அந்த விருதுடன் அவருக்கு பரிசாக ஒரு லட்சம் யூரோவும் வழங்கப்பட்டது அதாவது இந்திய மதிப்பில் ரூ.89 ஆயிரத்து 398 ரூபாய்ஆகும். இதுகுறித்து அந்த சிறுமியிடம் கேட்டபோது “எனது தாயார் என்னுடைய புகைப்படத்திற்கு சர்வதேச விருது கிடைத்திருப்பதாக கூறினார் அதை என்னால் நம்பவே முடியவில்லை.” என்றார் இந்தியாவில் வேறு எந்த குழந்தையும் இத்தகைய சர்வதேச விருதை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆத்யாவின் புகைப்பட திறமையை யுனெஸ்கோ நிறுவனம் வெகுவாக பாராட்டி உள்ளது.