பெங்களூருவில் கனமழைக்கு 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் கனமழையால் பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உல்லால் புறநகர் பகுதியில் குழாய் பதிக்கும் பணியாளர்கள் இருவர் கனமழையின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது அவர்களின் உடல் பணியிடத்தில் கண்டெடுக்கப்பட்டது. ஒருவர் பீகாரைச் சேர்ந்தவர், மற்றவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. செவ்வாய்கிழமை மாலை 5 மணி அளவில் கனமழை பெய்தது. இரவு 7 மணியளவில் நீர்மட்டம் உயர்ந்தது. இதுவரை 155 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ஜே.பி.நகர், ஜெயநகர், லால்பாக், சிக்பேட், மெஜஸ்டிக், மல்லேஸ்வரம், ராஜாஜி நகர், யஸ்வந்த்பூர், எம்.ஜி.சாலை, கப்பன் பார்க், விஜயநகர், ராஜராஜேஸ்வரி நகர், கங்கேரி, மாகடி சாலை, மைசூர் சாலை என்று பல பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பலத்த மின்னல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மெட்ரோ சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.