உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில நாடுகளில் 12 வயதிற்கு மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசி குறித்து உலக சுகாதார மையம் ஜனவரி 19ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகளவில் கொரோனாவால் 32,39,90,826 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 26,52,42,503 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 55,46,652 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.