Categories
தேசிய செய்திகள்

“பூஸ்டர் தடுப்பூசி கால இடைவெளியை குறைக்க வேண்டும்”…. கோரிக்கை விடுத்துள்ள சீரம் நிறுவனம்….!!!!

சீரம் இன்ஸ்டிடிட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதார் பூனவல்லா பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது 9 மாதங்களாக உள்ள பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளியை 6 மாதங்களாக குறைக்க வேண்டும் என்று அரசிடம் முறையிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, “தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

தடுப்பூசிக்கான கால இடைவெளி தான் இதற்கு முக்கிய காரணம். இரண்டு மற்றும் மூன்றாவது தவணை தடுப்பூசிக்கான பூஸ்டர் தடுப்பூசி கால இடைவெளி 9 மாதங்களாக உள்ளது. இந்த கால இடைவெளியை 6 மாதங்களாக குறைக்க வேண்டும். பூஸ்டர் தடுப்பூசிக்கான இடைவெளி உலகின் பல்வேறு பகுதிகளிலும் குறைவாகவே உள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |