Categories
உலக செய்திகள்

பூமி பெரிய அளவில் நாசத்தை சந்திக்கும்…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை….!!!!

பல்வேறு மாசுக்களால் சீரழிந்து கிடக்கும் வளிமண்டலம், விண்வெளி சுற்றுலா தொடங்கப்பட்டால் பெரியளவில் நாசத்தை சந்திக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். விண்வெளிக்கு ஏவப்படும் ராக்கெட்டுகள் சராசரியாக விமானங்களை விட 100 மடங்கு அதிக கார்பன்டை ஆக்சைடையும், ராக்கெட்டை உந்திச் செல்லும் பாகங்கள் அதிகமான நைட்ரஜன் ஆக்சைடையும் வெளியிடும். இவை, ஏற்கனவே பாதித்துள்ள ஓசோன் படலத்தை மேலும் பாதிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் குழு ஆண்டுக்கு 400 முறை விண்வெளிக்கு ராக்கெட்டை ஏவப் போவதாக அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனமும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இன்னும் இந்த எண்ணிக்கையை அறிவிக்கவில்லை. இந்த நிறுவனங்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் முறையாவது ராக்கெட்டுகளை ஏவும் என்று தெரிகிறது.ஏற்கனவே ஓசோன் படலம் பாதிப்பு உள்ள நிலையில் இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |