பூமியை நோக்கி வரக்கூடிய ஆபத்தான 4 சிறுகோள்கள் இன்று தாக்கக்கூடும் என நாசா தெரிவித்து இருக்கிறது. நாசாவின் கூற்று அடிப்படையில், இன்று பூமியின் மேற்பரப்புக்கு மிக அருகே வர இருக்கும் 4 சிறு கோள்களால் உலகில் பல விதமான மாற்றங்கள் ஏற்படலாம். ஏனென்றால் பூமியை நோக்கி அசுர வேகத்தில் வந்துகொண்டிருக்கும் 4 ஆபத்தான சிறு கோள்கள் இவை. அவற்றில் சில ஹைப்பர் சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் வேகத்தில் பயணிக்கிறது என்பதும் கவலையளிக்கிறது. எனினும் ஆறுதல் தரும் செய்தியாக, அவற்றில் சில பூமியை தாக்காது எனவும் நம்மைக் கடந்து பறக்காது எனவும் நாசா தெரிவித்து உள்ளது.
பூமியை நோக்கி செல்லக்கூடிய 4 சிறு கோள்கள் பற்றி தெரிந்துகொள்வோம்
சிறுகோள் 2005 LW3
இது மிகப் பெரிய சிறுகோள். அத்துடன் நாசாவால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் சிறுகோளாகும். கடந்த 2005 LW3 என பெயரிடப்பட்ட இந்த மிகப் பெரிய சிறுகோள் குறித்து நாசாவின் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இந்த சிறு கோள் அளவு 426 அடி முதல் 918 அடி வரை இருக்கும். இது நம் பூமிகிரகத்தை நோக்கி மணிக்கு 48580 கி.மீ வேகத்தில் பயணித்து வந்துக்கொண்டிருப்பதாகாவும், இன்று (நவ..25) பூமியை தாக்கலாம் எனவும் நாசா எச்சரித்து உள்ளது.
சிறுகோள் 2022 WS2
இந்த சிறுகோள் பூமிக்கு மிக அருகே வருவதால் நாசா எச்சரிக்கை விடுத்து உள்ளது. 39 – 88 அடி வரையிலான அளவு உடைய இந்த சிறுகோள், பூமிக்கு மிக அருகில் நெருங்கிவரும். இது பூமியில் இருந்து 3 மில்லியன் கி.மீ தொலைவில் மணிக்கு 42039 கி.மீ வேகத்தில் பயணிக்கிறது.
சிறுகோள் 2022 WR2
இது பூமியிலிருந்து வெறும் 3.5 கி.மீ தொலைவில் வரும். மணிக்கு 27629 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த சிறுகோள் மிக சிறியது என்பதால் பூமியில் மோதினாலும் பாதிப்பை ஏற்படுத்தாது.
சிறுகோள் 2022 WL2
பூமியின் மேற் பரப்பைத் தாக்கும் இந்த வாரத்தின் 4வது சிறுகோள் இதுவாகும். இதனுடைய அளவு 29 -65 அடி வரை இருக்கும். இது பூமிக்கு மிக அருகே 2.2 மில்லியன் கி.மீ தொலைவில் வரும். இது 1 மணி நேரத்திற்கு 28980 கி.மீ அசுரவேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இது ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையின் வேகத்தை விட 2 மடங்கு கொண்டது.