ஆஸ்திரேலியாவின் வானியல் விஞ்ஞானிகள் கடந்த 1994 ஆண்டு கண்டறிந்த விண்வெளி பாறை ஒன்று வருகின்ற 18ம் தேதி பூமியை கடந்து செல்லப் போவதாக நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆஸ்திரேலிய நாட்டின் வானியல் ஆய்வாளர்கள் கடந்த 1994 ஆம் ஆண்டு 7482 என்று பெயரிடப்பட்ட விண்வெளி பாறை ஒன்றை கண்டறிந்துள்ளார்கள். இந்த பாறை 3280 அடி விட்டம் கொண்டதாக காணப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்த 7482 என்று பெயரிடப்பட்ட இந்த விண்வெளி பாறை வருகின்ற 18ம் தேதி பூமியை கடந்து செல்லும் என்று நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் இந்த பாறையால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்கள்.