Categories
உலக செய்திகள்

பூமியில் இருப்பதை விட அங்கு தான் தங்கம் கொட்டி கிடக்கு?…. ஆய்வு செய்ய பிளான் போடும் நாசா…..!!!!

பூமியில் உள்ளதை விட பன்மடங்கு தங்கம் கொட்டி கிடைக்கக்கூடிய விண்கல்லை ஆய்வு மேற்கொள்ள நாசா முடிவு செய்து இருக்கிறது. அதாவது 16 சைக்கி என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கல் இப்போது வியாழன் மற்றும் செவ்வாய் கோள்களுக்கு இடையில் சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. சுமார் 226 கிலோ மீட்டர் அகலம் இருக்கும் இந்த விண்கல்லில் இரும்பு, நிக்கல், தங்கம் ஆகிய உலோகங்கள் இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.

இதனுடைய மதிப்பு சுமார் $10,000 குவாடிரில்லியன் டாலர்கள் கொண்டதாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இவை பூமியின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பை விடவும் பன்மடங்கு ஆகும். சைக்கி-யில் உலோக மையம் இருக்கும் என்று கருதப்படுவதால் இந்த விண்கல்லை ஆய்வு மேற்கொள்வதன் வாயிலாக பூமியின் மையப் பகுதி குறித்த பல தகவல்களை அறிந்துக்கொள்ள உதவியாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் ஆய்வின்போது விண்கல்லின் மேற்பரப்பை படம்பிடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. சைக்கி விண்கலம் கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்பட்டு 2026ம் வருடம் விண்கல்லை சென்றடையும்படி திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும் மென் பொருளில் ஏற்பட்ட கோளாறாலும், திட்டத்தை மேலும் மேம்படுத்த வேண்டி இருந்ததாலும் திட்டமிட்டபடி விண்கலத்தை ஏவ முடியவில்லை. இதன் காரணமாக வருகிற 2023ம் வருடத்தில் விண்கலத்தை ஏவுவதற்கு நாசா திட்டமிட்டிருக்கிறது.

Categories

Tech |