பௌர்ணமி தினத்தன்று பூமியிலிருந்து நிலவை பார்க்கும் போது மிகவும் அருகில் இருப்பது போல தோன்றும். அது ஏன் தெரியுமா? அதைப் பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம்.
பௌர்ணமி தினத்தில் மட்டும் வானத்தில் நிலவை பார்க்கும் போது மிகவும் பெரிதாக அருகில் இருப்பது போல தோன்றும். நாம் விண்வெளிக்கு செல்லும் போது நிலவை பார்த்து விட்டு வந்து விடலாம் என்பது போல் இருக்கும். ஆனால் அது உண்மை அல்ல. நம் பூமியில் இருந்து நிலா கிட்டத்தட்ட 3 லட்சத்து 84 ஆயிரத்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அது எவ்வளவு தூரம் என்று நாம் எளிதில் கூற வேண்டுமென்றால், நம் விண்வெளியில் பால்வெளியில் உள்ள அனைத்து கோள்களையும் பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரத்தில் வரிசையாக நேர்கோட்டில் அடக்கிவிட முடியும். அவ்வளவு தூரத்தில் தான் பூமியும் நிலவும் உள்ளது.
பற்றாக்குறைக்கு நிலவு நமது பூமியை வட்டப்பாதையில் சுற்றி வராமல் நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றது. இதனால் நிலா சில சமயம் அருகில் இருப்பது போன்றும் சில சமயம் தூரத்தில் இருப்பது போன்றும் தோன்றும். அதுமட்டுமில்லாமல் அதன் பாதை ஐந்து டிகிரி சாய்ந்து இருக்கும். அப்படி சாயாமல் இருந்தால் 30 நாட்களுக்கு ஒரு முறை சூரிய சந்திர கிரகணத்தை நாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம். இப்போதைக்கு மிகவும் தொலைவில் இருக்கும் நிலவானது இன்னும் நூறு வருடங்கள் கழித்து இதைவிட தொலைவில் இருக்குமாம். இதற்கான காரணம் ஒவ்வொரு வருடமும் மூன்று சென்டிமீட்டர் அளவிற்கு நிலா பூமியை விட்டு விலகிச் சென்று கொண்டு உள்ளதாம். சில நூறு வருடங்கள் கழித்து நிலா நம் வானில் தெரியும் ஒரு நட்சத்திரத்தை போலதான் காட்சியளிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.