Categories
மாவட்ட செய்திகள்

பூனை காணவில்லை…. கண்டுபிடித்து கொடுத்தால் அசத்தல் பரிசு…. மக்களை வியக்க வைத்த போஸ்டர்….!!!!!

செல்லப்பிராணிகள் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியா கிவிடுவார்கள். செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு பெரும்பாலானோருக்கு ஆர்வமும் விருப்பமும் அதிகமாக இருக்கும். செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவிட்டால் மனது மிகவும் சந்தோஷமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் செய்வினைகள், சூனியம் மற்றும் பேய் பிசாசு போன்ற தீய சக்திகளை கண்டறிவதற்காக செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுகின்றன.

இந்நிலையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் தனது வீட்டில் வளர்த்த செல்லப்பிராணி பூனை காணவில்லை என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் பூனையின் பெயர் ஜெயஸ்ரீ, வயது ஆறு, அடையாள உதட்டில் மச்சம் மற்றும் நவம்பர் 29ஆம் தேதி முதல் காணவில்லை. அதனைத் தொடர்ந்து பூனையை பார்த்தீர்கள் என்றால் கீழுள்ள தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். மேலும் பூனையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என்றும் பூனை புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் அந்த பகுதியில் உள்ள பொது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |