பூத்துக் குலுங்கும் கொன்றை மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றார் போல் பூக்கள் பூக்கும். தற்போது கோடைகாலம் மலர்களான குன்றை பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. இந்த மலர்களின் சிறப்புகள் சங்ககால இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த சித்திரை விஷு திருவிழாவில் கொன்றை மலர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படும். இந்தத் திருவிழாவை முன்னிட்டு மலர்களின் விற்பனை அமோகமாக நடைபெறும். மேலும் பூத்துக் குலுங்கும் கொன்றை மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கின்றனர்.