குடிபோதையில் திருட வந்த நபர் அதே வீட்டில் மயங்கிக்கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் சேகர் (58) இவரது மனைவி ஆனந்தி (55) இவர்கள் தற்போது சென்னையில் உள்ள தில்லைகங்கா நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். இருவரும் நேற்று காலை சமையல் வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் மாலையில் வீடு திரும்பிய ஆனந்தி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார்.அப்போது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அருகில் ஒரு நபர் மயங்கி கிடந்துள்ளார். ஆனந்தி அதைப்பார்த்ததும் கூச்சலிட்டு கத்தியதில் அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்தனர். அதன் பிறகு திருட வந்த நபர் போதையில் இருந்ததால் மயங்கி விழுந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த நபரை மயக்கத்திலிருந்து தெளிய வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.