மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், புனேவில் ஒரு பகுதியில் இரவில் ஒரு வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவைத் திறக்கும்படி கூறினர். கதவை திறக்காத காரணத்தினால் அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற போது, நான்கு பேர் சேர்ந்து ஒரு பெண்ணை சித்திரவதை செய்து கொண்டிருந்தன.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்கள் நால்வரையும் கைது செய்தனர். மேலும் அந்த பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நால்வரிடம் விசாரணை செய்தபோது சம்பவ தினத்தன்று மாலை பேருந்து நிலையத்திலிருந்து அப்பெண்ணை அழைத்து வந்து ஒரு வீட்டில் அறையில் பூட்டி வைத்து விட்டு, பிறகு அவரது நண்பர் மூவரையும் அழைத்து வந்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.