Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பூட்டிக்கிடந்த வீடு…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மர்ம நபரின் கைவரிசை….!!

வீட்டின் கதவை உடைத்து 5 லட்சம் மதிப்புள்ள  நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் பொய்யபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம்.  ஆழ்துளை கிணறு அமைக்கும் வேலை செய்யும் இவர் தனது வேலைதொடர்பாக   சென்னை  சென்றுள்ளார்.
அவரது குடும்பத்தினரும் வீட்டை பூட்டி விட்டு திருச்சியிலுள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றனர். இந்நிலையில்  சென்னை சென்ற சண்முகம் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டதை கண்டு உடனே வீட்டின் உள்ளே சென்று பார்த்து உள்ளார்.  அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், டிவி ஆகிய பொருட்கள் கொள்ளை போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து புகாரின் பெயரில் விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்- இன்ஸ்பெக்டர் பரணி நாதன் மற்ற காவலர்கள் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். .பின்பு கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்ததோடு  மோப்பநாய் ராக்கியும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தியதில் அது சிறிது தூரம் ஓடி சென்று  நின்று விட்டது. திருட்டு போன பொருட்களின் மதிப்பு  5 லட்சம் ரூபாய் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |