தாலுகா அலுவலகத்திற்குள் நாய்கள் புகுந்து அட்டகாசம் செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் இருக்கும் திண்டிவனம் சாலையில் தாலுகா அலுவலகம் இருக்கின்ற நிலையில் நேற்றுமுன்தினம் அலுவலர்கள் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். பின் நேற்று காலை வந்து பார்த்த பொழுது மேஜை மீதிருந்த கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த பொழுது மூன்று நாய்கள் அலுவலகத்திற்குள் வந்து மேஜை விரிப்பை கீழே தள்ளிவிட்டு கண்ணாடியை உடைந்தத காட்சி பதிவாகியிருந்தது.
தாலுக்கா அலுவலகத்தில் பூட்டு போடாமல் இருந்ததால் நாய்கள் உள்ளே நுழைந்து கண்ணாடியை உடைத்தது தெரியவந்தது. இந்த அலுவலகத்தில் கதவைப் பூட்டுவதற்கு பூட்டு கூட இல்லை என்பது தெரிந்தது. மேலும் சில நாட்களாக அலுவலகத்தில் காவலர்களும் இல்லை. தாலுக்கா அலுவலகத்தில் பூட்டு கூட இல்லை என்பது கவலையை ஏற்படுத்துகின்றது. அதிகாரிகள் இப்படி அலட்சியமாக செயல்படாமல் இருக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அலுவலகம் இப்படி பூட்ட படாமல் இருந்தால் மக்களுக்குத்தான் அது ஆபத்தில் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.