Categories
சினிமா

பூஜையுடன் துவங்கிய ஆர்.கே.சுரேஷின் “ஒயிட் ரோஸ்” படம்…. வெளியான புகைப்படம்…..!!!!

அறிமுகம் இயக்குனரான ராஜசேகர் இயக்கத்தில் “ஒயிட் ரோஸ்” என்ற படம் தயாராகுகிறது. இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். மேலும் இவருடன் தயாரிப்பாளரான ரூஸோ மற்றொருகதாநாயகனாக அறிமுகமாகிறார். அத்துடன் நடிகை “கயல்” ஆனந்தி ஆர்.கே.சுரேசிற்கு ஜோடியாக நடிக்கிறார். அதாவது என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்திற்கு ஜோஹன் ஷிவனேஷ் இசை அமைக்கிறார்.
இதையடுத்து கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். சைக்கோதிரில்லர் ஜானரில் தயாராகும் இந்த படத்தை ஸ்டூடியோ 9 பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், தயாரிப்பாளர் எஸ். ரூஸோவுடன் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் துவக்கவிழா சென்னையில் நேற்று நடந்தது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் ஆரி உட்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கேற்று படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Categories

Tech |