கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் தெப்பக்குளம் அருகே உள்ள ஐராவதநல்லூர் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பூசாரி பூஜையை முடித்துவிட்டு, கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் கோவிலுக்கு வந்த போது உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போய் இருந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி உடனடியாக கோவில் நிர்வாகி கிருஷ்ணனிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.