Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பூக்களால் முகத்தை மறைப்பது போல் போஸ் கொடுத்த சமந்தா”…. போட்டோவை பார்த்து மயங்கிய ஃபேன்ஸ்…!!!

நடிகை சமந்தா பகிர்ந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சமந்தா. இவர் சென்ற வருடம் தன் காதல் கணவரான நாக சைதன்யாவை பிரிந்தார். இதன் பிறகு இவர் எது செய்தாலும் அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் இவர் புஷ்பா படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றிற்கு நடனமாடியது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அண்மையில் சமந்தாவின் பிறந்தநாளன்று அவர் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரிலீஸ் ஆகியது. இந்த படத்தில் சமந்தாவின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் சமந்தா கையில் பூக்களை வைத்து தனது முகத்தை மறைப்பது போல் போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படமானது தற்போது ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வருகின்றது.

Categories

Tech |