இன்று (24/10/2022) மாலை சிட்ரங் புயல் தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் கூறியது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவான சிட்ரங் புயல் வங்கதேச கரையில் மையம் கொண்டுள்ளது. தமிழகத்திற்கு மழையை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்புயல் வடக்கு நோக்கி பயணித்துவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் மேகமூட்டம் காணப்பட்டாலும் பெரிய அளவில் மழை இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடியின் கயத்தாரில் 5 செ.மீ மழையும், கன்னியாகுமரியின் கோதையாறில் 3 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.