பிரபல நடிகர் புஷ்பா பட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக மட்டுமின்றி குணசத்திர கராபாத்திரம், வில்லன் என அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதால், விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர். இவர் சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். இவர் நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்க போகிறார் என்று சமீபத்தில் தகவல்கள் தீயாக பரவி வந்தது. இந்த தகவல்களுக்கு தற்போது விஜய் சேதுபதி தரப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அதாவது பாலிவுட்டில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் தான் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருவதாகவும், அது தவிர வேறு படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாக இல்லை எனவும் தகவல் வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக புஷ்பா இரண்டாம் பாகம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.