நடிகை ராஷ்மிகா மந்தனா புஷ்பா படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா இந்தியிலும் பிஸியாக உள்ளார். அவரது நடிப்பில் புஷ்பா படம் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது. திரையரங்கில் வெளியான இப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தார்.
அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனாஇதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், “புஷ்பா மீதான உங்கள் அன்புக்கு நன்றி. மேலும் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. புஷ்பா 2 திரைப்படம் சிறப்பாகவும் பெரியதாகவும் இருக்கும் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறோம்!” இவ்வாறு நடிகை ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.