புஷ்பா படத்தின் முதல் பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுன் தற்போது சுகுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், பகத் பாசில் வில்லனாகவும் நடிக்கின்றனர். மேலும் இரு பாகங்களாக உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
The WILDEST SONG OF THE YEAR is truly taking us on a wild ride!
50M+ Views with 1.65M+ Likes for #PushpaFirstSingle 🔥
– https://t.co/3BuH4woEC6#DaakkoDaakkoMeka #OduOduAadu #OduOduAade #JokkeJokkeMeke #JaagoJaagoBakre #PushpaTheRise@alluarjun @aryasukku @ThisIsDSP pic.twitter.com/Y35HF89fWe
— Mythri Movie Makers (@MythriOfficial) September 1, 2021
சமீபத்தில் புஷ்பா படத்தின் முதல் பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் இந்த பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மேலும் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகவுள்ளது.