அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் படப்பிடிப்பில் நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளார் .
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடைசியாக வெளியான ‘அல வைகுண்டபுரமுலு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் புஷ்பா படத்திலும், கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார் . இதில் இரு பாகங்களாக உருவாகி வரும் புஷ்பா படத்தை இயக்குனர் சுகுமார் இயக்குகிறார் .
Welcome on sets & wish you a very Happy & Prosperous Onam #FahadhFaasil Garu ❤️
– Team #Pushpa #PushpaTheRise#ThaggedheLe 🤙@alluarjun @iamRashmika @aryasukku @ThisIsDSP @resulp @adityamusic @PushpaMovie pic.twitter.com/lYXEhFx2l0
— Mythri Movie Makers (@MythriOfficial) August 21, 2021
மேலும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், பகத் பாசில் வில்லனாகவும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மேலும் புஷ்பா படத்தின் முதல் பாகம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . இந்நிலையில் புஷ்பா படத்தின் படப்பிடிப்பில் பகத் பாசில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.