சென்ற வருடம் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “புஷ்பா”. இந்த படத்தின் 2ஆம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. அடுத்த வருடம் புஷ்பா 2 வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இப்படம் உலக அளவில் சுமார் ரூபாய்.350 கோடி வரை வசூல் செய்தது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகி இருக்கும் காந்தாரா படம் புஷ்பா திரைப்படத்தின் வசூலை அசால்டாக முந்தி உள்ளது. அதன்படி, ரூபாய்.350 கோடி வசூலாகி சாதனை படைத்துள்ள புஷ்பா படத்தை 43 நாட்களில் ரூபாய். 359 கோடி வசூல்செய்து பாக்ஸ் ஆபிஸில் முந்தியிருக்கிறது. இதுவே காந்தாரா படத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.