அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அலவைகுண்ட புரம்லோ படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து இவர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்துள்ளார். இரு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், பகத் பாசில் வில்லனாகவும் நடித்துள்ளனர்.
#PushpaTrailer 🔥 pic.twitter.com/3roSO0iVm9
— Mythri Movie Makers (@MythriOfficial) November 29, 2021
மேலும் இந்த படம் பான்- இந்தியா படமாக உருவாகியுள்ளது. புஷ்பா படத்தின் முதல் பாகம் வருகிற டிசம்பர் 17-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் புஷ்பா படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 6-ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் ரிலீஸாகவுள்ளது.