புஷ்பா படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் பஹத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
She stole our ferocious #PushpaRaj's heart and she is coming to take our breath away 😍
Second single #Srivalli from #PushpaTheRise on October 13th ❤️#PushpaTheRiseOnDec17#ThaggedheLe 🤙@alluarjun @iamRashmika @aryasukku @ThisIsDSP @adityamusic @PushpaMovie pic.twitter.com/k0CBKRhpmc
— Mythri Movie Makers (@MythriOfficial) October 5, 2021
சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாடல் வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புஷ்பா படத்தின் முதல் பாகம் வருகிற டிசம்பர் 17-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.