புஷ்பா 2 குறித்த அறிவிப்பு வீடியோ விரைவில் வெளியாக உள்ளது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற வருடம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் “புஷ்பா”. இந்த படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.
இத்திரைப்படத்தின் 2-ம் பாகத்தின் படபிடிப்பு ஆரம்பமானதாக பல தகவல்கள் வெளியான நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கு படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட முடிவு செய்து இருக்கின்றது. வரும் சில நாட்களில் அதை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். அந்த வீடியோவில் படபிடிப்பு குறித்து அறிவிப்பு வருமா அல்லது பட அறிவிப்பு வருமா அல்லது படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல் வெளியே ஆகுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள்.