திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு புவனேஸ்வர்- ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் எண் 20896 வழக்கமாக மாலை 3.15 மணிக்கு வந்து 3.25 மணிக்கு புறப்பட்டு செல்லும். வருகிற 4- ஆம் தேதி முதல் இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு 4.15 மணிக்கு வந்து 4. 25 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதனை அடுத்து வருகிற 4,11, 18 ஆகிய தேதிகளில் மைசூரு-மயிலாடுதுறை வாராந்திர சிறப்பு கட்டண ரயில் எண் 06251 இரவு 11.45 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை மாலை 3:30 மணிக்கு மயிலாடுதுறைக்கு சென்றடையும். மறுமுனையில் ரயில் வண்டி எண் 06252 வருகிற 5, 12, 19 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையில் இருந்து மாலை 6:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12 மணிக்கு மைசூரை வந்தடையும் என திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Categories
புவனேஸ்வர்- ராமேஸ்வரம் வாராந்திர ரயில்…. திருச்சிக்கு வரும் நேரம் மாற்றம்…. வெளியான தகவல்…!!!
