Categories
தேசிய செய்திகள்

புளூ ஆதார் கார்டு என்றால் என்ன…? எப்படி வாங்குவது…? வாங்க பார்க்கலாம்…!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆதார் இல்லாமல் எங்கும் எதுவும் செய்ய முடியாது, அரசு நலத்திட்ட உதவிகள், ரேஷன் என எதுவுமே கிடைக்காது. அப்படிப்பட்ட முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது பிறந்த குழந்தைகளுக்கும் ஆதார் எடுக்கப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்கான ஆதார் கார்டு தான் புளூ ஆதார் கார்டு என்று அழைக்கப்படுகிறது. இதில் எழுத்துக்கள் அனைத்தும் நீலநிறத்தில் எழுதப்பட்டிருக்கும்.

ஐந்து வயதுக்கு கீழ் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இந்த ஆதார் கார்டு கொடுக்கப்படுகிறது. குழந்தை பிறந்தவுடனேயே ஆஸ்பத்திரியிலேயே ஆதார் எடுக்கும் வசதியை UIDAI  அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு புளூ ஆதார் எடுப்பதற்கு குழந்தை பிறப்பு சான்றிதழ் மிக அவசியம். மேலும் குழந்தையினுடைய தாய் அல்லது தந்தையினுடைய ஆதார் அட்டை, செல்போன் நம்பர் உள்ளிட்ட விவரங்களும் தேவைப்படுகிறது. அதற்கு முதலில் ஆதார் அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு சென்று அப்பாயிண்ட்மெண்ட் செய்ய வேண்டும்.

பின்னர் https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html என்ற இணைய பக்கத்தில் சென்று அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் குழந்தையின் பெயர், தந்தை அல்லது தாயின் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர் ஆதாரத்துடன் அப்பாயின்மென்ட் கிடைத்துவிடும். கடைசியாக தேவையான ஆவணங்களை வைத்துக்கொண்டு அப்பாயின்மென்ட் கொடுக்கப்பட்ட நாளில் ஆதார் சேவை மையத்திற்கு சென்று ஆதார் எடுத்து கொள்ளலாம்.

Categories

Tech |