புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சவுத்ரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தியாவின் புல்வாமா பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிப்ரவரி 26-ஆம் தேதி இந்திய விமானப்படை பாகிஸ்தானின் வால்கோட் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த ஜெயஸ்ரீ முகமது அமைப்பின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பவாத் சவுத்ரி இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே தாக்கியதாகவும் புல்வாமா விவகாரத்தை பாகிஸ்தான் அரசின் வெற்றி நாட்டின் வெற்றி என்றும் பேசினார்.
இந்த வெற்றிகள் அனைவருக்கும் பங்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தனது பேச்சு தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாக பவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் இந்திய வான்படை நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் அளித்ததையே தான் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.