Categories
ஆன்மிகம் இந்து

புல்லட்-ஐ தெய்வமாக வழிப்படும் மக்கள்… அமானுஷ்ய கோவில்…!!!!

ராஜாஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் ஓம் பன்னா அல்லது புல்லட் பாபா என்றும் அழைக்கபடும் கோவில் ஒன்று உள்ளது. இங்கு புல்லட் பைக்-ஐ தெய்வமாக கருதி வழிப்படுவர். ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக பயணிக்க இங்கு பலர் வந்து வழிப்பட்டு செல்வர்.

ஏன் இந்த கோவிலுக்கு இந்த விநோத பெயர் வந்தது என்பதற்கு ஒரு திகில் கதை உள்ளது. 1991 ஆம் ஆண்டில் ஓம் பன்னா என்பவர் தனது புல்லட்டில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்து நேரிட்டது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த ஊர் காவலர்கள் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த பின்னர், வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தியிருந்தனர்.

மறுநாள் காலையில் பார்த்த போது வாகனத்தை காணவில்லை. தேடியதில் வாகனம் விபத்து நடந்த இடத்தில் இருந்துள்ளது. அதன் பின்னர் மீண்டும் அதனை காவல் நிலையம் எடுத்து வந்த பூட்டுப்போட்டு வைத்தனர். இருப்பினும் மறுநாள் காலையில் வாகனத்தை காணவில்லை பார்த்தால் விபத்த நடந்த இடத்திலேயே காணப்பட்டது. இதே போல் பல முறை நிகழ்ந்துள்ளது.

இதையடுத்து காவலர்கள் வாகனத்தை அவ்விடத்திலேயே விற்றுவிட்டு சென்றுவிட்டனர். இதனை அறிந்த அந்த ஊர் மக்கள் வாகனம் இருக்கும் இடத்தில் கோவில் எழுப்பி வழிப்படத் தொடங்கினர். இப்படியாக வந்தது தான் புல்லட் பாபா கோவில். இந்த சாலையில் பயணிக்கும் அனைவரும் இந்த கோவிலை வழிப்பட்டு செல்வர். அப்படி செல்வதால் பயணம் நன்றாக இருப்பதாகவும், வழிப்படாமல் செல்பவர்கள் சிறு தடங்கல்களை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |